Annai Velankanni Santhosapuram icon

Annai Velankanni Santhosapuram

BOSCO SOFT TECHNOLOGIES FZE
Free
100+ downloads

About Annai Velankanni Santhosapuram

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு ஏற்ப, கோயில் இல்லாமல் தவித்த மக்களுக்கு சந்தோஷபுரம் வாழ் கிறிஸ்தவ மக்களின் முயற்சியால் அருட்பணி. ஜார்ஜ் அவர்களால் சந்தோஷபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் ஓரமாக 14.01.2006 அன்று மாதா கெபி ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கெபி சாலை விரிவாக்கப் பணி செய்யும்போது  அகற்றப்பட்டு மாதாவின் உதவியாலும் அருட்தந்தை. சிங்கராயர் அவர்களின் முயற்சியாலும் நம் பங்கு மக்களின் கடின உழைப்பாலும் தற்போதுள்ள இடத்தில் ஆலயம் எழுப்ப இடம் கொடுக்கப்பட்டது. இந்த இடத்தில் தற்போதுள்ள அன்னையின் சுரூபம் நிறுவப்பட்டு குருசடி அமைக்கப்பட்டு அருட்தந்தை. சிங்கராயர் அவர்களால் மந்திரித்து வைக்கப்பட்டு தினமும் தவறாது காலையும் மாலையும் ஜெபமாலை சொல்லி சிறப்பிக்கப்பட்டது. இந்த ஒரு குருசடியில் 15.08.2010 அன்று முதன் முதலாக அருட்தந்தை. சிங்கராயர் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இயேசுவின் அருளாலும் மாதாவின் வேண்டுதலாலும் 30.12.2010 அன்று எளிய முறையில் தகர கூரையுடன் அன்னையின் சிற்றாலயம் எழுப்பப்பட்டு மக்களின் பாசமிகு ஆயர் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டும் வேங்கைவாசல் பங்கின் துணை பங்காகவும் ஆயர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 2011  ஆம் ஆண்டு திருவிழா காலத்தில் கோவிலின் முகப்பு கோபுரமும் கட்டப்பட்டு சேலையூர் பங்கின் பங்குத்தந்தையாய் இருந்த அருட்தந்தை. பேட்ரிக் பூந்தோட்டா அவர்களால் மந்திரிக்கப்பட்டு மக்களின் வணக்கத்திற்கு உதவியாய் அமைகிறது. மேலும் அருட்தந்தை. அமலதாஸ் அவர்கள் வேங்கைவாசல் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் கோயில் முகப்பும், பின்புறமும் விரிவாக்கப்பட்டது.  தவக்காலத்தின்போது இயேசுவின் பாடுகளை தியானிக்க14 நிலையங்கள் ஆலயம் சுற்றிலும் மதில் சுவற்றில் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 06.02.2015 பங்கின் அன்பியங்கள் பக்த சபை, மறைக்கல்வி, மரியாயின் சேனை,  இளைஞர் குழு ஆகியவை அருட்தந்தை. அமலதாஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் அருட்தந்தை. பால்ராஜ் அவர்கள் பங்கு தந்தையாக இருந்த போது ஆலயத்தின் இடது புறம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தந்தையின் முயற்சியாளும் பங்கு மக்களின் செபத்தாலும் பாசமுகு ஆயர் மேதகு ஆயர். நீதிநாதன் சந்தோஷபுரம் தனிப் பங்காக 01.06 2019 அன்று உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. எட்வின் லாரன்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார்.   ஆலயம் உருவாகி பத்தாண்டுகள் நினைவாக புதிய தேர் மற்றும் தேரில் பயன்படுத்த புதிய மாதா சுரூபம் ஒன்றும் திருநிலைப்படுத்தப்பட்டது. அனைத்து இறை மக்களும் வழிபாடுகளிலும், கோயில் காரியங்கள் அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

Annai Velankanni Santhosapuram Screenshots