Tamil Buddhist icon

Tamil Buddhist

Shraddha Media Network
Free
100+ downloads

About Tamil Buddhist

தேவ மனிதர்களின் ஒப்பற்ற குருவான, தர்மராஜரான, மகா கருணை கொண்ட சாக்கிய முனிவரான கௌதம புத்த பகவான், உயிர்கள் அனைத்து துக்கங்களிலிருந்தும் மீள்வதற்காக மகா கருணையோடு மொழிந்தருளியதே உத்தம ஸ்ரீ சத்தர்மமாகும்.
மோட்சம் எனும் அமிர்தத்தினை பருகும் வழியை காட்டும் இந்த உன்னத தர்மம் உலகில் பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டாலும். பகவான் தோன்றிய பாரதத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றான செம்மொழியான தமிழ்மொழியில் இதுவரை முறையாக மொழிபெயர்க்கப்படவில்லை. இது முழு தமிழர் சமுதாயத்திற்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாகும். இதுவரை மொழிபெயர்க்கப்படாத தர்மத்தினை தமிழர் சமாதாயத்தினுள் பிரச்சாரம் செய்வதென்பதும் சாத்தியமற்ற விடயமாகும்.
இந்த பாரிய இடைவெளியை நிரப்புவதற்காக இலங்கையர்களான எம்மால் தோற்றுவிக்கப்பட்டதே ‘தமிழ் பௌத்தன்’ எனும் அமைப்பாகும். பூஜைக்குரிய கிரிபத்கொடை ஞானானந்த தேரரால் உருவாக்கப்பட்ட ‘மஹமெவ்னா’ தியான ஆஸ்ஸிரமங்களின் மூலம் இதுவரை இலங்கையில் போன்றே உலகம் முழுவதும் ஆஸ்ஸிரமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு கௌதம சம்புத்த ராஜனது சத்தர்மத்தினை அவர்தம் தாய்மொழிகளான ஆங்கிலம்,ஹிந்த, சிங்களம் எனும் மொழிகள் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுளன.
இந்த உன்னத சேவையின் எல்லைகளை மேன்மேலும் விரிவுபடுத்தும் வகையில் இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டது தான் ‘தமிழ் பௌத்தன்’ எனும் அமைப்பு.
இவ் அமைப்பு இலங்கையின் பொல்கஹவெல ‘மஹமெவ்னா’ தியான ஆஸ்ஸிரமங்களின் தலைமை ஆஸ்ஸிரமத்திற்குரியஇ தமிழ் மொழியிலான பிரச்சார அமைப்பாகும். அது மட்டுமல்லாது மஹமெவ்னா தியான ஆஸ்ஸிரமத்திற்குரிய இலத்திரனியல் ஊடக நிறுவனமான கொழும்பு கடுவலையில் நிறுவப்பட்டுள்ள ‘ஷ்ரத்தா’ ஊடக வலையமைப்பின் ஒரு கிளை அமைப்பாகவூம் கொண்டு நடத்தப்படுகிறது.
இல்லறத்தோர் மற்றும் துறவறத்தோர் எனும் இருவகையானோரும்,தமிழ் சிங்களம் எனும் இரு இனத்தினரோடும் துவங்கப்பட்ட எமது அமைப்பு இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும் இவ் அமைப்பின் மூலம் குறுகிய காலத்தினுள் பெறுமதிமிக்க சேவைகளை தமிழர் சமூகத்திற்காக அளிக்க முடிந்தது. நாம்இ இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் தர்ம செயலமர்கவுளை நடாத்தி தமிழ் சமுதாயத்திற்கு தம் தாய் மொழியினாலயே ததாகத புத்த பகவானது ஆச்சரியமிகுந்த தர்மத்தினை அறிமுகம் செய்ததுடன் இதுவரை மூன்று தர்ம நூல்களை சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளோம். அதேபோல் இன்னும் மூன்று நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றன. எமது இந்த சேவை தர்ம பிரச்சாரத்திற்கு மட்டும் வரையறுக்காது, நாம் குறைந்த வருமானம் கொண்ட தமிழ் பிள்ளைகளை இணங்கண்டு அவர்களின் எதிர்காலம் வளம் பெறுவதற்காக அவர்களுக்கு கற்கை உபகரணங்கள் மற்றும் தேவையான இதர பொருட்களை வழங்கியுள்ளோம். மூன்று தசாப்தங்களாக தொடர்ந்திருந்த யூத்தத்தினால் பிளவுபட்ட இன ஒற்றுமையை மீண்டும் தோற்றுவித்துஎமது சேவைகளை மேலும் விரிவடையச்செய்து,ஒப்பற்ற தமிழர்களின் வறலாற்றிலிருந்து நீங்கிய கௌதம புத்த சாசனத்தை பிரதிபலன்களை பெறும் வண்ணம் மீண்டும் நிறுவுவதே எமது உயரிய நோக்கமாகும்.
எமது பாக்கியமுள்ள புத்த பகவான் தன் திருவாயால் மொழிந்தருளிய உன்னதமான ஸ்ரீ சத் தர்மத்தை எவ்வித மாற்றங்களும் இன்றி தூய்மையாக கற்றுக் கொள்வதற்காக இந்த தமிழ் பௌத்தன் மொபைல் கருவி உருவாக்க பட்டுள்ளது, இந்த மொபைல் கருவி ஊடாக உலகம் என்கும் வாழ்கின்ற அனைத்து தமிழ் பௌத்தர்களுக்கு எந்தவித தடங்கலும் இன்றி சுகமாக தர்மத்தை கற்கவும், சீலம் அனுஷ்டிக்கவும், தியானங்கள் செய்யவும், பிரித் ஓதுவதன் மூலம் மற்றும் செவிமடுங்கி தன் வாழ்விற்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், தமிழ் பௌத்த நூல்களை பதிவிறக்கி வாசிப்பதன் மூலம் தர்ம ஞானத்தை விருத்தி செய்து கொளவதற்காகவும் இந்த மொபைல் கருவியெய் நாங்கள் உருவாக்கியுள்ளோம் அனைவரும் இந்த கருவியை பயன்படுத்தி தன் வாழ்விற்கு அளவிட முடியாத புண்ணியங்களை ஈட்டிக்கொள்ளவும்
நமோ புத்தாய..!!