Maha Mrityunjaya Mantram icon

Maha Mrityunjaya Mantram

VTLABS
Free
50+ downloads

About Maha Mrityunjaya Mantram

மிகவும் சக்தி வாய்ந்த மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை நாங்கள் தினமும் உச்சரிக்கும் போது நீ எங்களை மரணத்திலிருந்து விடுவித்துப் பாதுகாத்து நீண்ட ஆயுளைத் தருகிறவனே.

எல்லா உயிர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி நீண்ட ஆயுளைத் தரும் இறைவனே உன் மேனி எப்பொழுதும் நறுமணம் கமழும். மூன்று கண்களை உடையவனே, நீ தான் எங்கள் அனைவரையும் பேணி எங்கள் தேவையை அறிந்து உகர்ந்த நேரத்தில் அதைத் தந்து எங்களை வளர்ப்பவனே, நாங்கள் உன்னையே வணங்குகிறோம்.

எப்படி ஒரு மரத்தில் பழம் கனிந்து ஏற்றக் காலத்தில் கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல உற்ற தருணத்தில் எங்களை மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக.

நோயினால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றி போதிய பலன் இல்லாமல் எப்பொழுதும் வேதனையின் தவிப்பில் இருந்து கொண்டு இருக்கும் பக்தர்கள் இந்த மந்திரத்தைச் சொல்லி வந்தால் எந்த நோயாக இருந்தாலும் அது குணமாகும் என்று கூறுவர்.

தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால் மரணப் பயம் நீங்கும் மற்றும் ஆயுள் நாங்கள் நீடிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இறைவன் மீது அதிக பக்திக் கொண்டு எப்பொழுதும் அவன் நினைவில் இருப்பார்கள் என்றும் கருதுகின்றனர். தீய காரியங்களைச் செய்யாமல் நல்லோர்கள் சொல்லும் வழியில் நடந்து உனக்குப் பிரியமாக இருப்போம்.

Maha Mrityunjaya Mantram Screenshots