மஹாபாரதம் icon

மஹாபாரதம்

Pirapaakaran Pirathapan
Free
500+ downloads

About மஹாபாரதம்

106 தொகுப்புகளாக கொண்டு எமது கதைத்தொகுதி மிக எளிய வடிவமைப்பில் தரப்பட்டுள்ளது

இந்திய பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம். மகாபாரதம், உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகும்.

பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையேயான பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.

மனித வாழ்க்கையில் ஒருவன் எவ்வாறு அறநெறி மற்றும் ஒழுக்கத்தோடு
வாழவேண்டும் என்ற மையக் கருத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட காப்பியம் ஆகும்.

மேலும் மனிதன் எந்த நேரத்திலும் தருமத்தின் வழி தவறாது நடக்க வேண்டும் என்பதை பற்றியும் கூறுகிறது.

ஆசான்களை அவமதித்தல், பெண்மையை சூறையாடுதல், வினை விதைப்பவனின் விதி பயன், தீய இடத்தில் இருந்தும் நற்குணம் கொண்டவனின் கதி என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் என்ன செயல் செய்தால், அவனுக்கு என்ன பலன் விளைவிக்கப்படும் என வாழ்வியலில் புரிதல் ஏற்பட, நம் மண்ணில் நிகழ்ந்தேறிய மாபெரும் இதிகாசம் மகாபாரதம்.

பல தரும நெறிகளை நமக்கு உணர்த்துகின்றது. தருமத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். பல சந்தர்ப்பங்களில் தரும சங்கடங்கள் தோன்றி நம்மை நெறி தவற வைக்கப் பார்க்கும். அத்தகைய தருமசங்கடங்கள் விளையும்போது தீங்கைச் சிறிதும் எண்ணாது தர்மத்தைக் கடைப்பிடித்துப் பண்பால் உயர்ந்து விளங்க வேன்டும் என்பதை மகாபாரதம் பல இடங்களிலும் எடுத்துரைத்து நமக்கு வழிகாட்டுகின்றது.

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது.
இந்த மாபெரும் இதிகாசமானது நீங்கள் எளிதாக படிக்கும் வகையில் நமது செயலியில் பாகம் பாகமாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மஹாபாரதம் Screenshots